"தட்சிணாமூர்த்தி துதி"
(திருவிளையாடல் புராணம்)
கல்லாலின் புடையமர்ந்து நான்மறை
ஆறங்கமுதற் கற்ற கேள்வி
வல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்த
பூரணமாய் மறைக்கப் பாலாய்
எல்லமா யல்லதுமா யிருந்ததனை
இருந்தபடி இருந்து காட்டிச்
சொல்லாமற் சொன்னவரை நினையாம்-
னினைந்துபலத் தொடக்கை வெல்வாம்.
No comments:
Post a Comment